ETV Bharat / state

கோரையாற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் - பொள்ளாச்சி ஜெயராமன் - blockade dams

கோவை: மழை காலங்களில் அரபிக் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்க கோரையாற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டப்படும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்
author img

By

Published : Jun 18, 2019, 8:37 AM IST

இது குறித்து அவர் செய்தியாள்களிடம் கூறுகையில், 'மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மண்ணூர் சேர்வைக்காரன் புதூரில் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனையடுத்து சென்ற ஆண்டு ரூ. 2 கோடி செலவில் கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து தடுப்பணை தயாராகவுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

அதேபோல் மழைக்காலங்களில் அரபிக்கடலில் போய் சேரும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே கூடுதலாக ஆறு தடுப்பணைகள் கட்டப்படும். இதனால் அதிகளவில் தண்ணீர் சேமிக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் இந்த நீர் பயன்படுத்தப்படும்' என்றார்.

மழை காலங்களில்  வீணாக அரபிக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க 6 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி
பொள்ளாச்சி : ஜூலை : 17
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் சேர்வைக்காரன் புதூரில் தடுப்பணை  கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர் இதனை  அடுத்து கடந்தாண்டு ரூ 2 கோடி செலவில் அரபிக்கடலில் வீணாக சென்று கடலில் தண்ணீரை சேமிக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது இன்று சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தடுப்பணையை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டதன் மூலம் மழைக்காலங்களில் வீணாகச் சென்று கேரளா அரபிக்கடலில் கலக்கும் தண்ணீர் சேமிக்கப்படும் மேலும் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுவதோடு சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும்  அதேபோல் மழைப் பொழிவின் போது மேற்கு நோக்கிப் பாய்ந்து வீணாக சென்று அரபிக் கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் விதமாக 6 தடுப்பணைகள் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேவம்பாடி வலசு குளம் தூர் வாரப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.