கோவை மாவட்டம் வால்பாறை குரங்கு முடியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விநாயகர் சிலை ஒன்று காணாமல்போனது. இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலையைத் தேடி வந்தனர். இந்த சம்பவம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிலையம் அருகே சாக்கு பையில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சாக்கு பையை திறந்து பார்த்தபோது, குரங்கு முடியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போன விநாயகர் சிலை இருப்பது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட விநாயகர் சிலைக்கு இந்து அமைப்புகள் மூலம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் குரங்கு முடியில் சிலையை வைக்க காவல் துறையினர், பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலை கடத்தல் வழக்கு: காதர் பாட்ஷாவின் மனு தள்ளுபடி!