ETV Bharat / state

பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்!

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவலர்கள் மற்றும் துணை ராணுவம் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

author img

By

Published : Apr 5, 2021, 7:14 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை (ஏப்.6) வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு சாவடிக்கு அனுப்பும் பணி திவீரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள 612 வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான உபகரணங்களுடன், பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இருந்து, காவல்துறை பாதுகாப்புடன் தனியார் வாகனங்கள் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பொள்ளாச்சி தொகுதியில் 318 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதே போல் வால்பாறை தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கான வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பாக துணை ராணுவத்தினரும் தமிழ்நாடு காவல் துறையினரும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசியில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.