கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் மயில் ஒன்று பறந்து வந்து அமர்ந்தது. அப்போது, மயில் மீது உயரழுத்த மின்கம்பி பட்டதால், மயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன், தலைமைக் காவலர் சுகுமார் ஆகியோர் உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடியினை அணிவித்து, உரிய மரியாதை செய்து மதுக்கரை வனச்சரகரிடம் ஒப்படைத்தனர்.
இறந்துபோன மயிலுக்கு தேசியக் கொடியை அணிவித்து மரியாதை செய்த சிங்காநல்லூர் காவலர்களின் செயலை கண்ட அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:தேசியப் பறவையின் அழகில் சாந்தமான தேசிய விலங்கு - வைரல் புகைப்படம்!