கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளான இன்று (ஜுன் 3) பல்வேறு மக்களாலும் திமுக தொண்டர்களும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை குனியமுத்துர் பகுதியை சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர், 500 மிகி தங்கத்தில் கலைஞரின் கையெழுத்தை சிறிய அளவில் வடிவமைத்துள்ளார்.
கலைஞரின் கையெழுத்தின் கீழ் அவரது 99 வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 99 என்ற எண்ணையும் இணைந்து வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே இது போன்று பல்வேறு மைக்ரோ ஆர்ட் கலையினை தங்கத்தில் வடிவமைத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரிப்பன் மாளிகையை மாணவனாக வேடிக்கை பார்த்தவன் இன்று விளக்குகளை ஒளிர வைத்துள்ளேன் - முதலமைச்சர் பூரிப்பு!