கோவை மாவட்டம் காரமடை எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த புலியகுளம் பகுதியை சேர்ந்த சுபாஷ்(28) என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த பரிந்துரை பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள சுபாஷ் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தல் - 42 பேர் கைது