கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, எங்களின் கோரிக்கை என்பது பெயர்மாற்றம் என்பது அல்ல பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறுவது என்பதுதான். புதிய தமிழகம் கட்சியின் சார்பாகப் பட்டியல் வகுப்பில் உள்ள 6 பிரிவை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களையும், சட்டப்பேரவையிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம்.
தற்பொழுது மாநில அரசு ஐஏஎஸ் அந்தஸ்திலான உயர் மட்ட அலுவலர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து தேவேந்திர குல் வேளாளராக அங்கீகரிக்க மத்திய அரசிற்குப் பரிந்துரை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் பெயர் மாற்றம் மட்டும் பயன்தராது. மாற்றாகப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும், தேவேந்திர குல வேளாளர் என்ற அங்கீகாரமும் வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்றார்.