ETV Bharat / state

பப்ஜியால் நேர்ந்த விபரீதம்: இளைஞரின் கையை வெட்டிய முதியவர் - covai district news

பப்ஜி விளையாடிய இளைஞரின் கையை வெட்டிய முதியவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

a
a
author img

By

Published : Feb 1, 2022, 11:17 AM IST

திருப்பூர்: முருகம்பாளையம், பாறைக்காட்டைச் சேர்ந்தவர் கார்த்திக். தாராபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவட் வீட்டுக்கு அருகே துவைக்கும் கல்லில் அமர்ந்து அடிக்கடி ‘பப்ஜி’ விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நேற்று (ஜனவரி 31) இரவு வழக்கம்போல் நண்பர்களுடன் கார்த்திக் ‘பப்ஜி’ விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தூங்குவதற்கு இடையூறாக இருப்பதாக வந்து எச்சரித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்துவந்து கார்த்திக்கை வெட்டியுள்ளார். காயமடைந்த கார்த்திக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

பின்னர், இது குறித்து அறிந்த வீரபாண்டி காவல் துறையினர் ராமசாமியை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட ராமசாமி, ஒரு கொலை வழக்குத் தொடர்பாக தண்டனை அனுபவித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலியல் தொழில் செய்துவந்த புரோக்கர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.