ETV Bharat / state

தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்த காதல் திருமணம்... தம்பதியை பிரித்ததா காவல் துறை?

கோயம்புத்தூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்த காதல் திருமணத்தை தேவகோட்டை காவல்துறை உதவியோடு, மணப்பெண்ணின் உறவினர்கள் பிரித்து வைத்துள்ளதாக தபெதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்த காதல் திருமணம்.. தம்பதியை பிரித்ததா காவல்துறை?

author img

By

Published : Jun 3, 2022, 10:52 AM IST

கோயம்புத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த கெளசல்யா(19), கோயம்புத்தூர் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(23) இருவரும் கோயம்புத்தூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மே 31ஆம் தேதி கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கார்த்திக்கின் வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது.

இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் ஜூன் 1ஆம் தேதி கோவை வந்துள்ளனர். அப்போது தேவகோட்டை காவல்துறையினர் உதவியுடன் தம்பதிகள் சரவணம்பட்டியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். இதனையறிந்த தம்பதி சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டனர். அங்கேயும் சென்ற தேவகோட்டை போலீசார் தம்பதி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்த காதல் திருமணம்.. தம்பதியை பிரித்ததா காவல்துறை?

இதற்கு சரவணம்பட்டி போலீசாரும் சம்பதம் தெரிவித்தனர். ஆனால் தம்பதி மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும், சரவணம்பட்டி போலீசார் கட்டாயப்படுத்தி தம்பதியை காரில் ஏற்றி உறவினர்கள் உடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சென்றுகொண்டிருந்த போது காரில் இருந்து கார்த்தியை உறவினர்கள் மிரட்டி இறக்கி விட்டுவிட்டு, பெண்ணை மட்டும் அழைத்து சென்றதாக கோவை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்களது தரப்பில், “எங்கள் அலுவலகத்தில் திருமணம் செய்தவர்களை ஏமாற்றி அழைத்து சென்று காவல்துறையினர் பிரித்து விட்டனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண தம்பதியை சேர்த்து வைக்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமியை காதலிப்பதாக கூறி வன்புணர்வு செய்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.