ETV Bharat / state

”உள்ளாட்சி தேர்தலுக்காக சோதனை நடைபெறவில்லை” - covai district news

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனை உள்ளாட்சி தேர்தலுக்காக நடைபெறவில்லை என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு
பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு
author img

By

Published : Sep 17, 2021, 7:02 AM IST

கோவை : பீளமேடு பகுதியில் உள்ள கண்டியப்பன் சமூக கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதனை உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் 48 இடங்களில் மையத்திற்கு 50 பேர் வீதம் 2 ஆயிரத்து 400 பேர் கலந்து கொள்ளும் வகையில் இந்த சமூக வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு
பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், “பெண்களுக்கு என தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்த திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகின்றது. வளைகாப்பு நிகழ்வின் போது சீர்வரிசை வழங்கப்பட்டு, அவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு
பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு

1,485 இடங்களில் தடுப்பூசி முகாம்

கரோனா தொற்று அதிகமாக இருந்த மாவட்டமாக இருந்த கோவை தற்போது எண்ணிக்கையில் 200ஆக குறைந்துள்ளது. வரும் காலத்தில் மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த அரசு தயாராக இருக்கிறது. கரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தபட்ட பின்னர் முழு தளர்வுகள் அளிக்கப்படும்.

அமைச்சர் சக்கரபாணி

வரும் ஞாயிற்று கிழமை 1,485 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் டோஸ் தடுப்பூசி 23 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஆறு லட்சம் பேருக்கும் மேற்பட்டோரும் போட்டுள்ளனர். நோயைக் கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்காக சோதனை நடைபெறவில்லை

தடுப்பூசியை ஒன்றிய அரசிடம் இருந்து கூடுதலாக பெற்று செலுத்த நடவடிக்கை எடுககப்படும். அரிசி கடத்தலை தடுக்க என கோவை மாவட்டத்திலும் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிப்படி முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் வந்திருக்கும். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தப்படுகிறது. இது உள்ளாட்சி தேர்தலுக்காக சோதனை நடைபெறவில்லை. அரசியல் செய்யும் நோக்கில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தபடவில்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி நடிகை மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.