ETV Bharat / state

காந்தி ஜெயந்தியில் மது விற்பனை - கண்டுகொள்ளாத காவல்துறை! - காந்தி ஜெயந்தியில் மதுவிற்பனை; கண்டுகொள்ளாத காவல்துறை

கோவை: காந்தி ஜெயந்தியான இன்று தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தாராளமாக மது விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லையென பொதுமக்கள் புகார் அளித்துவருகின்றனர்.

the day of Gandhi Jayanthi Liquor was sold in coimbatore district
author img

By

Published : Oct 2, 2019, 10:07 PM IST

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அகிம்சையை போதிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் இறைச்சி கூடங்களுக்கும் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது வழக்கம்.

இந்நிலையில், காந்தியின் 150வது பிறந்தநாளான இன்று கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும், டாஸ்மாக் கடைகளை சாத்திவிட்டு அருகில் உள்ள பார்களில் எந்த ஒரு அச்சமுமின்றி மது விற்பனை நடைபெற்றுவருகிறது.

காவல் நிலையத்திற்கு அருகேயும், நெடுஞ்சாலைகளின் ஓரத்திலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுப் பிரியர்கள் வழக்கம்போல மதுவை வாங்கிச் செல்கின்றனர். காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும் மதுக்கடைகள் திறந்திருப்பதை கண்டுகொள்ளவேயில்லை. இதனால் எப்போதும் போல வியாபாரம் களை கட்டுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காந்தி ஜெயந்தியில் மதுவிற்பனை; கண்டுகொள்ளாத காவல்துறை

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகையில், அகிம்சையை போதித்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளில் இறைச்சி கடைகளுக்கும், மது கடைகளுக்கும், அக்டோபர் 2ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கிறது. ஆனால் இந்த தடைகள் எதையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் ஊழியர்களும், பார் ஊழியர்களும் மது விற்பனை செய்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் சிறப்புப் பாடலை பகிர்ந்தார் குடியரசு துணைத் தலைவர்

Intro:காந்தி ஜெயந்தியான இன்று தாராளமாக விற்கப்படும் மது, காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மது விற்பனை அமோகம். கண்டுகொள்ளாத காவல்துறையினர்.Body:மகாத்மா காந்தியின் 150 பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் நினைவாக பல்வேறு நலத்திட்டங்கள் இந்நாளில் வழங்கப்பட்டும் வருகிறது. மேலும்
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இறைச்சி கூடங்களுக்கும் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது வழக்கம், அகிம்சையை போதித்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் இதற்கு தடை விதிக்கப்படும். இந்நிலையில் காந்தி ஜெயந்தி அன்று கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மதுக்கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது டாஸ்மாக் கடைகளை சாத்திவிட்டு அருகில் உள்ள பார்களில் எந்த ஒரு அச்சமுமின்றி மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது காவல் நிலையத்திற்கு அருகேயும் நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுப் பிரியர்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர் மேலும் வழக்கமாக செயல்படுவது போல பார் இயங்கி வருகிறது மதுக்கடையை தவிர்த்து பாரில் மது விற்பனை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது .140 ரூபாய்க்கு விற்கப்படும் பீரின் விலை 230 ரூபாய்க்கும் 150 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு குவாட்டர் மதுவின் விலை 250 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும் மதுக்கடைகளை கண்டுகொள்ளவே இல்லை இதனால் எப்போதும் போல வியாபாரம் களை கட்டுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அகிம்சையை போதித்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் இறைச்சி கடைகளுக்கும், மது கடைகளுக்கும், அக்டோபர் 2 ம் தேதி அரசு விடுமுறை அளிக்கிறது. ஆனால் இந்த தடைகளை ஏதும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் ஊழியர்களும் பார் ஊழியர்களும் மது விற்பனை செய்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் காவல்துறையினர் மது விற்பனையை கண்டுகொள்ளவே இல்லை என குற்றம் சாட்டினர். குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.