கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் நேற்றிரவு சாலையோரம் படுத்து இருந்த ஒருவரின் தலையில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லை போட்டு தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காட்டூர் காவல்துறையினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெயர் பாலகிருஷ்ணன் என்பதும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் நேற்று இரவு சாலையோரத்தில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது குடிபோதையில் வந்த இரண்டு பேர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலையில் கல்லை போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.