கோவை ராமநாதபுரம் பகுதியில் கோவை மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கவேண்டிய ஓய்வூதியத்தை 11 மாதங்களாக கொடுக்கவில்லை என்றும் எனவே அதனை உடனடியாக வழங்க வேண்டும், ஊரடங்கு காலங்களான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பல ஆயிரம் பேருக்கு நிவாரணத் தொகை வழங்கவில்லை அவர்களுக்கு முதலமைச்சரின் ஊரடங்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
ஆன்லைன் பதிவு தொடங்கி இரு மாதங்கள் ஆகியும் அட்டை கிடைக்காமல் உள்ளது. எனவே ஆன்லைன் நடைமுறையை எளிமையாக்க வேண்டும், ஆன்லைன் நடைமுறையைப் பற்றி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும், ஊரடங்கு தேதி முதல் இந்நாள் வரை உள்ள ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரணம், உள்ளிட்ட மனுக்களை நேரடியாகவே பெற்று நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: பொதுப்பணித்துறையினரை கண்டித்து ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்!