கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட இம்மிடிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்காக பெரியார் மணி என்பவர் போட்டியிடுகிறார். இவர் மக்களிடம் ’ஓட்டுக்கு காசு, குவார்ட்டர் கொடுக்க மாட்டேன்’ என வித்தியாசமான முறையில் வாக்கு கேட்கும் விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்மிடிபாளையம் மக்களுக்காக 15 வருடங்கள் சமூக சேவை செய்துவரும், தான் கொடுக்கும் வாக்குறுதிகளை வெற்றிபெற்ற பின் நிறைவேற்றவில்லையென்றால் தன்னை வார்டு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் பொறுப்பை வாக்களிக்கும் மக்களிடமே கொடுத்துள்ளார். அதன்படி தனது ராஜினாமா கடிதத்தை பத்திரத்தில் எழுதி அதை மக்களிடம் கொடுத்துள்ளார்.
800 வாக்குகள் உள்ள இந்தப் பகுதியில் இவரை எதிர்த்து போட்டியிடும் ஆளும் மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்கள் இவரது வாக்குறுதிகளை கண்டு மிரண்டுபோய் உள்ளனர். இப்பகுதியில் பயன்படாமல் இருந்த பொதுக் கழிப்பிடத்தை சரிசெய்து பயன்படுத்த வேண்டி, இவரால் முன்னெடுக்கப்பட்ட பொது வெளியில் மலம் கழிக்கும் போராட்டத்தின் விளைவாக அரசு அலுவலர்கள் உடனடியாக சரிசெய்து கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் வனக்காப்பாளரின் இளையராஜா பாடல்