கோவை வனச்சரகம் கெம்பனூர் நவாவூத் வனப்பகுதியில் நேற்று பழங்குடியின மக்கள் மூலிகை பறிக்க சென்றுள்ளனர். அப்போது, ஒரு இடத்தில் துர்நாற்றம் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து, கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானை உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி என்பதும், பாறை மேல் இருந்து வழுக்கி கீழே விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை உடற்கூராய்வு பரிசோதனை செய்து மற்ற ஊண் உண்ணிகளுக்காக அங்கேயே விட்டனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸின் கடன் 988% அதிகரிப்பு! வருத்தப்படாதீங்க... உள்ளே பாருங்க சும்மா அதிருமில்ல!