கோவை புலியகுளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இ-சேவை மையத்தின் திறப்பு விழா இன்று (ஆக.26) நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து ஐந்து லட்சம் கோடிக்கு மேல் வாங்கி உள்ளது. கரோனாவிற்காக மட்டுமே 6,600 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது” என்றார்.
மேலும் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையில், “திமுக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. அந்த நோக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி, மக்களை திசை திருப்ப பார்க்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான அலையாக பாஜக இருக்கும். அதேசமயம் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்பது வெறும் அரசியல் ஏற்பாடுகள் மட்டுமே. எங்களது லட்சியம் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே” என்றார்.
இதையும் படிங்க: நோ அரியர்... அரியர் வைத்திருந்தால், ஆல் பாஸ் - முதலமைச்சர் அதிரடி!