ETV Bharat / state

புத்துணர்வு முகாமில் பங்கேற்க கோயில் யானைகள் வரவழைப்பு! - பிப்.8ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை புத்துணர்வு முகாம்

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்க பல்வேறு இடங்களிலிருந்து கோயில் யானைகள் அழைத்து வரப்படுகின்றன.

temple elephant
temple elephant
author img

By

Published : Feb 7, 2021, 5:01 PM IST

தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் அழைத்து வரப்படுகின்றன.

பிப்.8ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை இந்த முகாம் நடைபெறுகிறது. லாரிகள் மூலம் அழைத்து வரப்படும் யானைகள் அனைத்திற்கும் எடை, வயது, உயரம் ஆகியவை பார்க்கப்பட்டு அதன்பின் அனுமதிக்கப்படுகின்றன. 48 நாள்கள் நடைபெறும் இந்த முகாமில் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். எடை அதிகமாக உள்ள யானைகளுக்கு நடைபயிற்சியும், எடை குறைவாக உள்ள யானைகளுக்கு அதற்கேற்றவாறு உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

முகாம் நிறைவடையும்போது மீண்டும் யானைகளின் எடை சரிபார்க்கப்பட்டு, பின்னர் அனுப்பி வைக்கப்படும். தற்போதுவரை திருச்செந்தூர் தெய்வானை யானை, மயிலாடுதுறை அபயாம்பிகை யானை, பேரூர் யானை, திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் யானை, ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாள் கோயில் யானை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளன.

முகாமிற்கு வரும் கோயில் யானைகள்

இந்த யானைகளுக்கு பிடித்த தீவனங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்த புத்துணர்வு முகாம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் - ரங்கசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.