ETV Bharat / state

தெலங்கானாவிலும் என்னை சகோதரி என்று அழைக்கிறார்கள்- தமிழிசை நெகிழ்ச்சி - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை: தன்னை ஆளுநர் என்று அழைப்பதைவிட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புவதாகவும் தெலங்கானாவிலும் தன்னை சகோதரி என்று அழைப்பதாகவும் அம்மாநில ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழிசை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan
author img

By

Published : Oct 19, 2019, 4:09 PM IST

கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவன தின விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழிசை, "நான் தமிழ்நாட்டிற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்னை சகோதரி என்று அழைத்தது போலத்தான் தெலங்கானாவிலும் என்னை அக்கா என்று அழைக்கிறார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தெலங்கானா மக்கள் என்னை அக்கா என்றழைக்கிறார்கள்- தமிழிசை

மேலும் பேசுகையில், மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அன்பின் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தையும் இன்றைய இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். தனது உயரத்தை நிறத்தை முடியை கிண்டல் செய்தார்கள் என கவலையுடன் சொன்ன அவர், இன்று தன்னை கிண்டல் செய்தவர்களை தான் மேடையிலிருந்து கிண்டல் செய்கிறேன் எனத் தெரிவித்தார். எனவே தடைகளைத்தாண்டி குறிக்கோள் நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: 'நில அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே?' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்

Intro:தமிழக முதல்வருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ள நிலையில்,
அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைப்பதாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்காம ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Body:கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவனர் தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
நான் தமிழகத்திற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன், என்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதை தான் நான் அதிகம் விரும்புகிறேன் என தெரிவித்தார்.அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் தானாக டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இன்றைய இளைய தலைமுறையினர் நினைப்பதாகவும், மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எனக் கூறினார். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும்,
குடும்ப வாழக்கை முக்கியதுவத்தையும் அன்பின் பறிமாற்றத்தின் முக்கிய துவத்தையும் இன்றைய
இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

எனது உயரத்தை, நிறத்தை, முடியை கிண்டல்
செய்தார்கள், இன்று நான் மேடையில் இருந்து கொண்டு அவர்களை கிண்டல் செய்கிறேன். எனவே தடைகளை தாண்டி குறிக்கோள் நோக்கி மாணவர்கள் எப்போதும் பயணிக்க வேண்டும் என தெரிவித்தார். சீன பிரதமர் வருகையின் போது பிரதமர் மோடி வேட்டி அணிந்து தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டியது போல ,
தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக நான் இருப்பேன் எனவும் தெரிவித்தார். விழாவில் பேசும் போது தமிழகத்தில் என்னை அக்கா என்று அழைத்தது போல, தெலுங்கானாவிலும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.