தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையை அடுத்த பாலாஜி கோயில் பகுதியில், துறை (41) மற்றும் ஆனந்த் (36) ஆகிய இருவரும் 188 மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கத் துறை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்க துறை காவலர்கள் மற்றும் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் துணை ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது.
அப்போது இவர்களிடமிருந்து 188 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் 2 கோடி ரூபாய் மோசடி: டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது