கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட திரையரங்கம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் மோகன், கல்விக்குழும முதன்மை கல்வி அலுவலர் கிருஸ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர், இந்திய சினிமா பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 75ஆவது சுதந்திர அமிர்தப்பெரு விழாவை கொண்டாடும் இந்த சூழலில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்து தமிழ் சினிமா பெருமை சேர்த்தது.
கோவாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், 75 இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களது படைப்புகள் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டது எனத் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், வெளிநாடுகளில் இருந்து திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கபட்டுள்ளன.
இன்று தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியாவை கடந்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர்ஆர்ஆர், பாகுபலி போன்ற தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. மொழிகளைக்கடந்து நல்ல கருத்துகொண்ட சினிமா மற்றும் தொழில்நுட்பம் என்பதால் அவை சர்வதேச அளவிற்கே சென்றுவிட்டது. திரைப்படங்கள் எடுக்க அனுமதிபெற சிக்கிள் வின்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்புக்கான அனுமதி எளிமையாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 30 சதவீதம் சலுகையுடன் வெளிநாட்டவர்கள் படம் எடுக்க இந்தியாவில் அனுமதிக்கபடுகிறது. திரைப்படங்களுக்கு மொழிகள் பிரச்சனை இல்லை, பொருள் (content) தான் முக்கியம். இன்றைய திரைப்படங்கள் இந்தியாவை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்கின்றன' என தெரிவித்தார். சங்க இலக்கியங்களில் தமிழகம் என குறிப்பிடப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: லகு உத்யோக் பாரதி மாநாடு - மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பு