ETV Bharat / state

"சன்"னாக இருந்து பதவிக்கு வருபவர்களுக்கு, "சன்னியாசி"யாக இருந்து பதவிக்கு வருபவர்களை பற்றி தெரியாது - தமிழிசை! - ஆதிஅமரநாயகி உடனமார் ஆதிசங்கரர் கோயில்

Tamilisai Soundarrajan participated in Yaga Velvi held at Udanamar Adisankara Temple: கோயம்புத்தூர் ஆதிஅமரநாயகி உடனமார் ஆதிசங்கரர் கோயிலில் நடைபெற்ற யாக வேள்வியில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

உடனமார் ஆதிசங்கரர் கோயிலில் நடைபெற்ற யாக வேள்வியில் கலந்து கொண்ட  தமிழிசை சௌந்தர்ராஜன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 9:38 AM IST

உடனமார் ஆதிசங்கரர் கோயிலில் நடைபெற்ற யாக வேள்வியில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன்

கோயம்புத்தூர்: ஆனைமலை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அமைந்துள்ள ஆதிஅமரநாயகி உடனமார் ஆதிசங்கரர் கோயில் குடமுழுக்கு திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதை முன்னிட்டு வேதிகார்ச்சனை, மூன்றாம் கால யாக வேள்வி, யந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் நடைபெற்ற யாக வேள்வியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகம் ஆன்மீக பூமி, கோயில்கள் நன்றாக பராமரிக்க வேண்டும். கோயிலுக்கு அதிக செலவு செய்ய வேண்டும். கிராமங்களில் ஆன்மீகம் தழைத்து ஓங்க வேண்டும்.

எனவே தான் ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் நடைபெறும் ஆன்மீக விழாவிலும் நான் கலந்து கொள்கிறேன்" என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், "வயதில் சிறியவராக இருந்தாலும் யோகி ஆதித்யநாத் காலில் விழுவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் சன்னியாசியா? இல்லையா? என முரசொலி தற்போது ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது.

யோகி ஆதித்யநாத்துக்கு, இவர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் 5 முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். யோகி ஆதித்யநாத் சன்னாக இருந்து பதவிக்கு வரவில்லை. சன்னியாசியாக இருந்து பதவிக்கு வந்துள்ளார். சன்னாக இருந்து பதவிக்கு வருபவர்களுக்கு சன்னியாசியாக இருந்து பதவிக்கு வருபவர்களை பற்றி தெரியாது. சுய உழைப்பில் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்துள்ளார்.

தான் நினைப்பதை தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என நினைப்பது ஜனநாயகமா? சர்வதிகாரமா?. நான் கடவுள் இல்லை என்று சொன்னால், நீயும் கடவுள் இல்லையென்று சொல்ல வேண்டும், நான் கருப்பு அணிந்தால் நீயும் கருப்பு அணிய வேண்டும், நான் காலில் விழக் கூடாது என்றால் நீயும் காலில் விழக்கூடாது. இவர்கள் எங்கெல்லாம் போய் காலில் விழுகிறார்கள் என்று நமக்கு தெரியும். ஆகவே அவர்களின் கலாசார பழக்க வழக்கம் என்று அதை விட்டுவிட வேண்டும் என்பது எனது கருத்து" என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Tamilisai Soundararajan: கொடுக்கின்ற மசோதாவிற்கு எல்லாம் ஸ்டாம்ப் ஒட்ட ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.