ETV Bharat / state

தமிழ்நாடு- கேரளா இடையே போக்குவரத்து தொடங்கியது - பயணிகள் மகிழ்ச்சி - கேரளா பேருந்து சேவை

23 மாதங்களுக்கு பிறகு கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயணிகள் மகிழ்ச்சி
பயணிகள் மகிழ்ச்சி
author img

By

Published : Dec 1, 2021, 11:07 AM IST

கோவை : கரோனா தொற்று காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இரு மாநிலங்கள் இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டுமென கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடந்த 6ஆம் தேதி கடிதம் எழுதினார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நேற்று(நவ.30) தமிழ்நாடு-கேரளா இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து 23 மாதங்களுக்கு பிறகு இன்று (டிசம்பர்.1) காலை முதல் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து தொடங்கியது

அதன்படி, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 10 தமிழ்நாடு அரசு பேருந்துகள் பாலக்காட்டிற்கும், பாலக்காட்டிலிருந்து கோவைக்கு 10 கேரள மாநில பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் சேவை மட்டுமே கேரள மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் தமிழ்நாடு அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க : School Leave : மழை பாதிப்பு - பள்ளிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.