கோவை ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தபட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த வாரம் தாமஸ் வீதி, ஒப்பணகார வீதி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குட்கா பதுக்கி வைத்திருந்த 11 கடைகள், 2 குடோன்களுக்கு அவற்றை மூட நோட்டீஸ் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று ஒரு குடோன், கடைக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் தேவநாதன், காவல்துறையினர் சீல் வைத்தனர். ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையால் குட்கா விற்பனை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 190 கிலோ கிராம் குட்கா பறிமுதல்!