ETV Bharat / state

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி 6 பேர் படுகாயம்

கோவை: பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author img

By

Published : Oct 1, 2019, 8:54 AM IST

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

கோவையிலிருந்து மதுரை செல்லும் அரசுப்பேருந்து பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சக வாகன ஓட்டிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும். ஆறு பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சாலை
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை படகில் எடுத்துச் சென்ற அவலம்...!

Intro:busBody:busConclusion:பொள்ளாச்சியில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி 6 பேர் படுகாயம் - நடத்துனர் கவலைக்கிடம்
பொள்ளாச்சி : செப்:30

கோவையிலிருந்து மதுரை செல்லும் அரசு பேருந்து இன்று சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 8.30 மணிக்கு பொள்ளாச்சியை வந்தடைந்தது. பின்னர் பொள்ளாச்சியில் இருந்து 9 மணிக்கு மேல் புறப்பட்டு பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஊஞ்ச வேலம்பட்டி அருகே எதிரே . அதிக ஒளி எழுப்பி வந்த வாகனத்தால் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது இதில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது உள்ளே இருந்த பயணிகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ள கிராம மக்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர் படுகாயமடைந்த உடுமலையை சேர்ந்த ராஜேஷ் கண்ணா, மற்றும் மோகன்குமார், பாஸ்கரன், அய்யனார், பேருந்து ஓட்டுனர் லட்சுமணன் நடத்துனர் சொக்கலிங்கம் உள்ளிட்ட 6 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அப்போது ராஜேஷ்கண்ணா பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த நடத்துனர் சொக்கலிங்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் புதிதாக போடப்பட்ட பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான்கள் பொருத்தாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.