சு.சீனிவாசன். கோவை
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ்வை கொல்லைபுறத்தின் வழியாக சந்தி்க்கின்றார் எனவும் ஜெயித்தால்தானே மூன்றாவது அணி அமைக்க முடியும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை சின்னியம்பாளையத்தில் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் இங்கே வந்து பேசி சென்றுள்ளனர் என கூறிய முதல்வர், ஆளுகின்ற அதிமுக சார்பில் நிற்க வைக்கப்பட்டுள்ள வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும்
திமுக வெற்றி பெற்றால் அவர்களுக்கு எண்ணிக்கை மட்டுமே கூடும் எனவும் தெரிவித்தார். இது வரை திமுக எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து
மனு க்கள் எதுவும் கொடுத்ததில்லை என கூறிய அவர்,
திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் உங்களின் கோரிக்கைகள் எங்கு செல்லும் என று உங்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்தார்.
ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கின்றார் என கூறிய அவர்,அவர் அறிவிக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை எனவும்,
பொது மக்கள் ஏமாறகூடாது எனவும் தெரிவித்தார்.
திமுக வேட்பாளருக்கு வாக்கு செலுத்தினால் நீங்கள் ஏமாந்துவிட்டதாக அர்த்தம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
டிடிவி தினகரன் எப்போது வந்தார், எப்போது கட்சி ஆரம்மித்தார் என்று தெரியவில்லை என கூறிய அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன்,10 வருடமாக அவர் கட்சியிலேயே கிடையாது எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கும், கட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்தியவர் தினகரன் என கூறிய அவர் , அந்த நெருக்கடகளை அடித்து நொறுக்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
தினகரன் எண்ணம்மே அதிமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதுதான் என கூறிய அவர்,திமுகவுடன் ரகசிய உடன்பாடு வைத்து அதிமுகவை உடைத்து வீழ்த்த தினகரன் பார்க்கின்றார் எனவும், அவருக்கு தகுந்த பாடம் கற்பிற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.தினகரனும், ஸ்டாலினும் உடன்பாடு வைத்து இருக்கின்றனர் என கூறிய அவர், அதைதான் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார் எனவும் தெரிவித்தார்.திமுக, அமமுக இரண்டும் ஓன்றுதான் என கூறிய முதல்வர், கள்ள தொடர்பு வைத்து அதிமுகவை வீழ்த்த பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
திமுக குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம், அது கட்சியல்ல , கம்பெனி என தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
ஜெ மறைவிற்கு பின்னர் ஆட்சியில் அமர ஸ்டாலின் துடித்தார் எனவும் அது முடியவில்லை என கூறிய அவர், அந்த ஆதங்கத்தில் அவர் பேசுகின்றார் எனவும் தெரிவித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் ஏதேதோ பேசி திரிகின்றார் என்று கூறிய அவர்,இவர் சிவப்பா இருக்கின்றாராம், இப்போது கருத்துவிட்டாராம் எனவும் தெரிவித்தார். ஸ்டாலினுக்கு 70 வயது ஆகிவிட்டது , என்னை விட ஸ்டாலின் வயதில் மூத்தவர் என கூறிய முதல்வர் எம்ஜிஆரை விடவா ஸ்டாலின் அழகா இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்யாமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது என கூறிய அவர்,சட்டம் ஓழுங்கு சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம் எனவும், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையம் என்று விருது பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார். சென்னையில் 2.20
லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், குற்றம் எங்கு நடந்தாலும் பிடித்துவிடுவோம் எனவும் தெரிவித்தார். மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது எனவும்
அந்த விழாவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை யாரையும் கேட்காமல் அறிவித்தார் எனவும் தெரிவித்தார்.சந்திரபாபு நாயுடு உட்பட யாரும் அதை ஏற்கவில்லை என கூறிய முதல்வர், நேற்று மூன்றாவது அணிக்காக முயற்சிக்கும் சந்திரசேகர்ராவ்வை கொல்லைபுறத்தின் வழியாக அவரை சந்தி்க்கின்றார் எனவும், நீங்கள் ஜெயித்தால்தானே மூன்றாவது அணி அமைக்க முடியும் எனவும் தெரிவித்தார். நல்ல முடிவை அறிவிக்க மக்கள் தயாராகி விட்டனர் என கூறிய அவர்,ஸ்டாலின் கனவு ஓரு போதும் பலிக்காது எனவும் தெரிவித்தார..
சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
இருகூர் பேரூராட்சியில் 22 கோடி, சின்னியம்பாளையம் பகுதியில் 5 கோடி மதிப்பீட்டில், நீலாம்பூர் ஊராட்சியில் 2.25 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்த அவர்,
60 ஆண்டு கால கோரிக்கையான அவினாசி அத்திகடவு திட்ட பணிகளும் துவங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதனால் கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்கள் பலன் அடையும் என கூறிய முதல்வர்,
கௌசிகா நதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும்
சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள நீர் நிலைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.கொடிசியாவின் கிளை உருவாகும் போது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Video in reporter app