ETV Bharat / state

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! - கோயம்புத்தூரில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோயம்புத்தூர்: திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்
author img

By

Published : Mar 1, 2020, 3:41 PM IST

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் குள்ளாக்காபாளையம் ஊராட்சி சடையகவுண்டன் புதூர்யில் மாநில நெசவாளர் அணி சார்பில், மாநில நெசவாளர் அணி மாநிலசெயலாளர் கே.எம். நாகராஜன் தலைமையில் கழகத் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் சேலைகள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகளை கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்

இதனையடுத்து பேசிய மாவட்ட பொறுப்பாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் முழுவதும் ஸ்டாலின் பிறந்தநாளை, மாதம் முழுவதும் கொண்டாடுவது என்று முடிவு செய்து, திமுக தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்தவுள்ளதாக தெரிவித்தார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் வே.மருதவேலு உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடியாத்தம் எம்எல்ஏ இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.