இலங்கை கடத்தல் மன்னன் அங்கோடா லொக்கா கடந்த 5ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய இவர், பிரதீப் சிங் என்ற பெயரில் மறைமுகமாக கோவையில் வசித்து வந்துள்ளார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோரை பீளமேடு காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாறிய நிலையில் இருவரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சிபிசிஐடியினர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற இருக்கின்றது. மேலும் சென்னை புழல் சிறையில் இருக்கும் அமானி தான்ஜியையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பேட்டரி, பெட்ரோல் திருட முயன்றவருக்கு தர்ம அடி - போலீசார் விசாரணை