ETV Bharat / state

நூற்பாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்!

author img

By

Published : Apr 12, 2021, 8:22 AM IST

கோயம்புத்தூர்: கருத்தம்பட்டி அருகே வார்ப்பட நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.

நூற்பாலை தீ விபத்து  Spinning mill fire accident  Spinning mill fire accident In karumathampatti  Spinning mill fire accident in Coimbatore  கருமத்தம்பட்டி நூற்பாலை தீ விபத்து  கோயம்புத்தூர் நூற்பாலை தீ விபத்து
Spinning mill fire accident in Coimbatore

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரியப்பன். இவர் அப்பகுதியில் சாந்தி சைசிங் ஆலை என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வார்ப்பட நூற்பாலை நடத்திவருகிறார்.

நேற்று (ஏப்ரல் 11) இரவு இவரது நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவெனப் பரவி பற்றி எரியத் தொடங்கியது. இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அன்னூர், அவிநாசி, பீளமேடு, பல்லடம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கருமத்தம்பட்டி சோமனூர் பகுதிகள் நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் நிறைந்த பகுதிகளாகும். இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில் வெளியூரிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அதிக அளவில் பொருள்சேதம் ஏற்படுகிறது.

இதனால், கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கக்கோரி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரிக்கைவிடுத்து-வருகிறோம்.

நூற்பாலையில் மளமளவெனப் பற்றி எரியும் தீ

ஆனால், இதுவரை தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்தத் தீ விபத்து குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்து - ரூ.20 கோடி மதிப்புள்ள பொருள்கள் நாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.