ETV Bharat / state

அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் காலிழந்த பெண்ணுக்கு அரசு வேலை!

author img

By

Published : Feb 8, 2020, 9:14 AM IST

கோவை: கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து இடது காலை இழந்த பெண்மணிக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணிநியமன ஆணையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

அமைச்சர் எஸ்பி வேலுமணி  மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன்  அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து  வங்கியாளர் ஆய்வுக்கூட்டம்
sp velumani

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் மற்றும் கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அவினாசி சாலையில் அதிமுக கொடிக் கம்பம் சாயந்து விபத்து ஏற்பட்டு இடதுகாலை இழந்த ராஜேஸ்வரி என்பவருக்கு சங்கனூர் கிராம உதவியாளர் பணிநியமன ஆணையை எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

அமைச்சர் எஸ்பி வேலுமணி

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, “கோவையில் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வர வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 6.97 லட்சம் சுய உதவிக்குழுக்களில் 103.32 உறுப்பினர்கள் உள்ளனர். 2011ஆம் ஆண்டிலிருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63 ஆயிரத்து 879 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழுக்களுக்கு மட்டும் 1,961 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மட்டும் 405 கோடி ரூபாய் கோவை மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் வீடு கட்டித் தரும் திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபயாய் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததால் மீதமுள்ள 1 முதல் 1.5 லட்சம் ரூபாயை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: "போலி பத்திரிகையாளர்களை கண்டுபிடிக்க அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது" - கடம்பூர் ராஜூ

Intro:அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலில் அந்த பெண்ணிற்கு அரசு வேலை நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் வேலுமணி

Body:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் மற்றும் கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டார்.

கூட்டம் துவங்குவதற்கு முன்னால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் 11ம் தேதி அவினாசி சாலையில் கோல்ட்வின்ஸ் பகுதியில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டு ராஜேஸ்வரி என்பவரின் இடது கால் அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு சங்கனூர் கிராம உதவியாளர் பணி நியமன ஆணையை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி கோவையில் வருகிற 23-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற போகிறது என்றும் அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வசதிகள் போன்றவை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும் அதைக் காண்பதற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்குபெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வங்கி ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு கடன் வழங்குவது தொடர்பாக வங்கிப் பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தமிழ்நாட்டில் 6.97 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள்ளதாகவும் அதில் 103.32 உறுப்பினர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 2011 ஆம் ஆண்டில் இருந்து 63,879 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் கோவையில் மட்டும் ஊரகப் பகுதிகளில் 5742 சுய உதவி குழுக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கிட்டத்தட்ட 1961 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டு மட்டும் 405 கோடி ரூபாய் சுய உதவி குழுக்கள் வங்கிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் வீடு கட்டித் தரும் திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அதில் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஏற்கனவே வழங்கி இருப்பினும் மீதம் தேவைப்படும் 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வழங்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.