உலகம் முழுவதும் இன்று ’ரிங்க் ஆஃப் பயர்’ (Ring of Fire Solar Eclipse) எனப்படும் கங்கண சூரிய கிரகணம் வானில் தென்பட்டது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில், இன்று காலை 10.15 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் இந்த சூரிய கிரகணம் தென்பட்டது.
![Solar eclipse visible in covai district](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:03:26:1592739206_tn-cbe-02-solor-ecliptic-visu-tn10027_21062020132359_2106f_00993_335.jpg)
ஆனால் இதனை குறைந்த அளவு பொது மக்கள் மட்டுமே கண்டுகளித்தனர். தற்போது நிலவி வரும் கரோனா அச்சத்தினாலும், சூரிய கிரகணத்தன்று வெளியில் வரக் கூடாது என்ற மூட நம்பிக்கையாலும், வெறும் கண்களில் சூரியனைக் காணக் கூடாது என்பதினாலும் பலரும் சூரிய கிரகணத்தைக் காண ஆர்வம் காட்டவில்லை.
![Solar eclipse visible in covai district](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:03:28:1592739208_tn-cbe-02-solor-ecliptic-visu-tn10027_21062020132359_2106f_00993_964.jpg)
இது குறித்து பேசிய தொலைநோக்கி உற்பத்தியாளர் முருகேசன், ”கோவையில் வானிலை மிகவும் சிறப்பாக இருப்பதால் சூரிய கிரகணம் நன்றாக தெரியும். இது வானிலை ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாகும். மாணவர்கள் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கிரகணம் தமிழ்நாட்டைக் காட்டிலும் வட மாநிலங்களில் (மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி) முழுமையாகத் தெரியும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!