ETV Bharat / state

அழிவின் விளிம்பில் தேவாங்கு இனம்..! எப்படி பாதுகாப்பது..? வழி இருக்கிறதா..?

அழிவின் விளிம்பில் உள்ள குரங்கினமான அரிய வகை தேவாங்குகளை பாதுகாக்க கடவூர் மற்றும் அய்யலூர் மலைப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக மாற்ற வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஒரு சிறிய தொகுப்பு...

Slender loris Sanctuary  Slender loris  Loris lydekkerianus  Gray Slender Loris  Slender loris Sanctuary to prevent them  Socialist asking for Slender loris Sanctuary to prevent them  அழிந்து வருகிறதா தேவாங்கு இனம்  தேவாங்கு இனம்  அழிவின் விளிம்பில் தேவாங்கு இனம்  தேவாங்கு சரணாலையம்  சாம்பல் தேவாங்கு  உலோரிசு இலைடெக்கெரியனசு
அழிவின் விளிம்பில் தேவாங்கு இனம்
author img

By

Published : Apr 20, 2022, 11:03 PM IST

Updated : Apr 21, 2022, 7:55 PM IST

கோயம்புத்தூர்: "என்ன தேவாங்கு மாதிரி முழிக்கிறாய்" இந்த வார்த்தையை கேட்காத ஆட்களே இல்லை, ஆனால் தற்போது உள்ளவர்களில் தேவாங்கை பற்றி கேள்விபட்டவர்களைக் காட்டிலும் பார்த்தவர்கள் மிகவும் குறைவு.

இரவில் இரை தேடும் சிறு பாலூட்டி விலங்கான, உலோரிசு இலைடெக்கெரியனசு (Loris lydekkerianus) எனப்படும் சாம்பல் தேவாங்கு (Gray Slender Loris), எதற்கும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், மனிதர்கள், குரங்குகள் உள்ள முதனி என்னும் வரிசையில் உள்ளது.

தேவாங்கு கதை தெரியுமா..? இது பெரும்பாலும் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களிடையே வாழ்கின்றன. உருவத்தில் இது 18-26 செ.மீ, 7-10 செ.மீ நீளமும், 85-350 கிராம் எடையுமே உள்ள சிறு விலங்காகும். பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகள், இலை தழைகளை உண்ணும் தேவாங்கு, சுமார் 166-169 நாட்கள் கருவுற்று இருந்து, 1-2 குட்டிகளை ஈன்று, குட்டிகளுக்கு 6-7 மாதம் பாலூட்டும் என்று கூறப்படுகிறது.

இயற்கை மீது அளவில்லாத நேசம் கொண்ட, முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, எதிரிகள் மீது போர் தொடுக்க, தேவாங்கை பயன்படுத்தினார் என, சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி தொடரில் குறிப்பிட்டுள்ளது. அதாவது, தேவாங்கு தரையில் அமரும்போது வடக்கு திசையை நோக்கி மட்டுமே அமர்வதால் கடல் பயணத்தில் திசையை அறிந்து கொண்டு போருக்கு சென்றதாக அந்த தொடரில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

தேவாங்கு சரணாலயம்: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், நத்தம், செந்துறை ஆகிய வனப்பகுதிகளிலும், கரூர் மாவட்டம் கடவூர் வனப்பகுதிகளிலும் அரிய வகை விலங்கினமான தேவாங்குகள் உள்ளன. அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் அழிந்து வரும் தேவாங்கும் இடம் பெற்றுள்ளது. எனவே, இதனை பாதுகாக்கும் வகையில் அய்யலூர் மற்றும் கடவூர் வனப்பகுதிகளை ஒன்றிணைத்து சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கடவூர் மலையை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்க வேண்டும் எனவும், இதன் எண்ணிக்கையை, பாதுகாப்பதோடு பெருக்க அறிவியல் ரீதியான ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அழிவின் விளிம்பில் தேவாங்கு இனம்

அழியும் நிலை: இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறுகையில், “தமிழ்நாடு மேற்குத்தொடர்ச்சி மலையில் நான்கு வகையான குரங்கினங்கள் உள்ளன. அதில் இரண்டு வகையான லங்கூர் குரங்குகள், இரண்டு வகையான மெகாக் வகை குரங்கினங்கள் உள்ளன. அவற்றிலிருந்து மாறுபட்டது லோரிஸ் வகை என சொல்லக்கூடிய தேவாங்கு இனம்.

இரவில் நடமாடும் இவற்றின் வகை தற்போது குறைந்து வருகிறது. பகல் முழுவதும் மரப்பொந்துகளில் வாழும் இவை இரவில் பூச்சிகளை உண்டு வாழ்கிறது. மூட நம்பிக்கை காரணமாக தேவாங்குகள் அழியும் நிலையில் உள்ளன. தற்போது இந்தியாவில் சில இடங்களில் மட்டும் காணப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் கடவூர் மற்றும் அய்யலூர் மலைப்பகுதியில் 2000 தேவாங்குகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான செய்தி, அழிந்து வரக்கூடிய குரங்கு இனம் ஒரே இடத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடத்தை சரணாலயமாக அறிவித்து காப்பாற்ற வேண்டியது வனத்துறையின் கடமை.

மூடநம்பிக்கை காரணமா..? அந்த உயிரினத்தை காண்கிற வாய்ப்பையும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு காட்டுயிர் அதனுடைய வாழ்விடத்தில் எப்படி வாழ்கிறது என்பதை அறிந்து கொண்டால், அதனை காப்பாற்ற வேண்டிய முக்கியத்துவம் தெரிந்துகொள்வார்கள். காட்டில் அனைத்து உயிர்களுக்குமான பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பிட்ட சில உயிர்களின் பாதுகாப்பு என்பது மிக அவசியமாகிறது.

தற்போது கடவூர் பகுதியில் மட்டும் இவ்வளவு தேவாங்குகள் இருப்பதென்பது பெருமை கொள்ளக்கூடியது. இது அந்த காட்டின் வளத்தைக் குறிக்கிறது. எனவே அதற்குரிய இடமாக மாற்றி தேவாங்கை காப்பாற்றுவதற்காக சரணாலயத்தை அறிவிக்க வேண்டும். தேவாங்கு பற்றிய மூடநம்பிக்கையும் உண்டு. ஜோசியம் பார்ப்பதற்குக் கூட பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு அறிவியல் ஆதாரம் கிடையாது. அவற்றை யாரும் நம்ப கூடாது என்ற விழிப்புணர்வை இந்த சரணாலயம் அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த முடியும். அதனை பொதுமக்களிடம் காட்டி அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Special: கோடை வெயிலால் ஏற்படும் தோல் நோய்கள் - பாதுகாப்பது எப்படி?

Last Updated : Apr 21, 2022, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.