ETV Bharat / state

மாணவி பாத்திமா லத்திப் தற்கொலைக்கு நீதி வழங்க கோரி ரயில் நிலையம் முற்றுகை - Siege of Coimbatore Railway Station

கோவை சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்திப்க்கு நீதி வழங்க கோரி சமூகநீதி மாணவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்திப்க்கு நீதி வழங்க கோரி சமூகநீதி மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Nov 19, 2019, 3:45 AM IST

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் உயிரிழப்புக்கு பேராசிரியர் பத்மநாபன் காரணம் என கூறப்படுகிறது. அவரை கைது செய்யக் கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட சமூகநீதி மாணவர்கள் இயக்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அப்போது அவர்கள் பத்மநாபனை கைது செய்யவேண்டும் என்றும், தற்போது நடந்திருப்பது பாசிசத்தின் வெறித்தனம் என்றும் முழக்கமிட்டனர்.

சமூகநீதி மாணவர்கள் போராட்டம்

பின்னர் பேசிய அவ்வியக்கத்தின் மாவட்ட செயலாளர் அம்ஜித் அலிகான், 'பாத்திமா லத்திப்-பின் தற்கொலைக்கு நீதி விசாரணை கோரியும், ஐஐடியில் ஆசிரியர் நியமனத்தில் முறைக்கேடு நடைபெறுவதை கண்டித்தும் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதாக' தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடக்குமுறையை மீறி போராட்டம் தொடரும்’ - முகிலன்

Intro:பாத்திமா லத்திப் தற்கொலைக்கு நீதி வழங்க கோரி சமூகநீதி மாணவர்கள் கட்சியினர் இரயில் நிலைய மறியல் போராட்டம் நடத்தினர்Body:சென்னை ஐஐடியில் பயின்று வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பாத்திமா லத்திப்(18) என்ற மாணவி கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலைக்கு பேராசிரியர் பத்மநாபன் என்று பலரும் கூறினர். மதரீதியான சொற்களை பயன்படுத்தியதே பாத்திமாவை தற்கொலைக்கு தூண்டியது என்றும் பலரும் கூறி வருகின்றனர். அவரை கைது செய்ய கோரி பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட சமூகநீதி மாணவர்கள் இயக்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். முற்றுகையிட வந்தவர்கள் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்றும் தற்போது நடந்திருப்பது பாசிசத்தின் வெறித்தனம் என்றும் முழக்கமிட்டனர்.

பின்னர் பேசிய அவ்வியக்கத்தின் மாவட்ட செயலாளர் அம்ஜித் அலிகான் பாத்திமா லத்திப்பின் தற்கொலைக்கு நீதி விசாரணை கோரியும் ஐஐடி நிறுவத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைக்கேடு நடைபெறுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமான பத்மநாபன் உட்பட மூன்று ஆசிரியர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஐஐடியில் சமூக அமைப்பை வைத்து வெளிப்படையான நிர்வாகமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.