ETV Bharat / state

வடமாநில தொழிலாளர்கள் ஆப்சென்ட்: ஆட்டம் காணும் கோவை தொழிற்துறை!

author img

By

Published : Jul 29, 2020, 2:16 PM IST

மாநிலங்களுக்கிடையே குடிபெயரும் தொழிலாளர்களுக்கென்று 1979இல் தனிச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. இந்த சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். மீண்டும் வேலைக்கு வர வழிவகை செய்யும்.

ஆட்டம் காணும் கோவை தொழிற்துறை!
ஆட்டம் காணும் கோவை தொழிற்துறை!

பட்டாம்பூச்சி விளைவு போலத்தான் தொழிலாளர்களின் இயக்கமும் தனித்தது அல்ல. கோவையில் பணிபுரியும் ஒருவரால், ஆயிரக்கணக்கான கி.மீ., அப்பால் இருக்கும் அவரது குடும்பம் பயனடையும். இதைத்தான் கரோனா நெருக்கடி தலைகீழாக மாற்றியது.

கோவை மாவட்டத்தின் பொருளாதார தூண்களில் ஒன்றான வார்ப்படத் தொழில் இப்போது தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே படாதபாடுபடுகிறது. இம்மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களை சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் நம்பியுள்ளனர்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் கோவையில் இருந்து சுமார் 90 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடையைக் கட்டினர். மீதமிருக்கும் தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்லும் முனைப்பில் உள்ளனர். இதனால் வடமாநில தொழிலாளர்களை சார்ந்து இயங்கும் தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, மோட்டார் பம்புகள், உற்பத்தி துறையில் பயன்படுத்தப்படும் இரும்பு உபகரணங்கள் அனைத்தும் தயாரிக்கப்படும் வார்ப்பட ஆலைகள் கோவையின் முக்கியமான தொழிற்துறைகள். இங்கு பிரதான தொழிலாளர்களாக வடமாநில தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது இவர்களின் பற்றாக்குறையால் தொழில்துறைகள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார், கோயம்புத்தூர் சிறு, குறு பவுண்டரி அதிபர்கள் சங்க தலைவர் சிவ சண்முக குமார்.

இது குறித்து அவர் கூறுகையில், “80 முதல் 90 விழுக்காடு வரை வட மாநில தொழிலாளர்களே வார்ப்படத் தொழிலில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இங்கிருந்து கிளம்பியதால் பவுண்டரி தொழில் முடக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வட மாநில தொழிலாளர்களுக்குப் பயிற்சியளித்து திறன்மிகு தொழிலாளர்களாக மாற்றியிருக்கிறோம். இப்போது உடனடியாக அவர்களை வேறொரு நபரைக் கொண்டு நிரப்பமுடியாது.

ஊடரங்கு நீடிப்பால் வெளி மாவட்ட தொழிலாளர்களும் வர முடியாத நிலை உள்ளது. இதனால் உற்பத்தித்திறன் பாதிக்கும். இதேபோல வட மாநில தொழிலாளர்கள் இடப்பெயர்வு சிறு, குறு தொழில்களுக்கு சாவலாக உள்ளது. ஏற்கனவே, நெருக்கடியில் இருக்கும்போது இந்த பற்றாக்குறை உற்பத்தியில் மந்த நிலையை உண்டாக்கும். மத்திய, மாநில அரசுகள் இ-பாஸ் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும். அவர்கள் வர சிறப்பு ரயில் இயக்க வேண்டும்” என்றார்.

வார்ப்படம் தயாரிக்கும் நிறுவனங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே அரும்பாடுபடுவதாகக் கூறும் கொடிசியா சங்கத் தலைவர், ராமமூர்த்தி, பொருளாதார சிக்கல்களை அழுத்தமாக விளக்குகிறார். அவர் கூறுகையில், “கரோனா நெருக்கடியிலிருந்து தொழிற்துறைகள் மீண்டு வரவே இந்தாண்டின் இறுதியாகும். சிறு, குறு தொழில் துறைக்கு வட மாநில தொழிலாளர்களின் பங்களிப்பு தேவை. சிறு, குறு தொழிற்துறையினர், அதுவரை ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியளிப்பது இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். வங்கிக்கடன் தவணதொகை செலுத்த கால நீட்டிப்பு செய்து, வட்டியை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆண்டு இறுதி வரையிலும் கூட கரோனா இருக்க வாய்ப்புள்ளது. அதனுடன் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கோவையிலிருந்து சேலம் வரை இண்டஸ்ட்ரியல் காரிடார் அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தொழிகள் ஒரே இடத்தில் இயக்கமுடியும், தொழில் முன்னேற்றம் பெற்றால் மட்டுமே மீண்டும் தொழில் செய்ய முடியும். இந்த வருடம் தொழிற்துறையினை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகள்தான் எடுக்கமுடியும்” என்றார்.

ஆட்டம் காணும் கோவை தொழிற்துறை!

முன்னதாக, ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின்போது அனைத்துவித நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக, அதாவது 18 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. இதனால் சிறு, குறு நிறுவனங்களால் பெரிய நிறுவனங்களிடம் போட்டியிட முடியாத நிலை உருவாகியது. பெரிய நிறுவங்களின் விளம்பர யுக்தியால் அவை பெரும்பான்மை மக்களிடம் சென்று சேருகிறது. ஆனால் அவற்றுடன் போட்டிப் போடமுடியாமல் சிறு, குறு நிறுவங்கள் நலிவடைந்துவருகிறது. இப்போது ஊரடங்கு அதிலும் கொடியதாக சிறு, குறு தொழில் நிறுவனங்களை வதைத்துவருகிறது.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர வழிவகை செய்யாவிட்டால் கோவையின் தொழில் கட்டமைப்பில் பாதிப்பு உண்டாகும் வாய்ப்பிருக்கிறது என்கிறார், கிருஷ்ணமூர்த்தி. அவர் கூறுகையில், “ஊரடங்கு பிறப்பித்ததும் காத்திருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நாளடைவில் கையிருப்பு கரைய கரைய சொந்த ஊருக்கு செல்வதில் ஆர்வம் காட்டினர். இதனால் ஆபத்தான முறையில் நடைபயணம் கூட மேற்கொண்டனர். இப்படி. தொழிலாளர்கள் இடம்பெயர்வால் கோவையில் மோட்டார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போல் பவுண்டரி தொழிலும் தொழிலாளர்கள் இல்லாததால் முடங்கியுள்ளன. இந்த முடக்கத்தால் இருதுறைசார்ந்த முதலாளிகளும் தொழிலாளர்களை சொந்த செலவில் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் இன்னும் அதற்கான பலன் கிடைக்கவில்லை” என்றார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கென சட்டங்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு என தனியாக சட்டம் இயற்றப்படுவது அவசியம் என்பதை ஊரடங்கு உணர்த்தியுள்ளது. மாநிலங்களுக்கிடையே குடிபெயரும் தொழிலாளர்களுக்கென்று 1979-ல் தனிச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. இந்த சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். மீண்டும் வேலைக்கு வர வழிவகை செய்யும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் தவிர்த்தால், ஒருவேளை தொழிலாளர்கள் வராவிட்டால் கோவையில் கட்டுமானம், உற்பத்தித்துறை போன்றவற்றில் மிகப் பெரிய பாதிப்பு உண்டாகும். இது மீண்டும் ஒரு பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இதையும் படிங்க: கோவையில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்களுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.