காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கரோனா பாதிப்பால் 15 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அதேசமயம் பெருநிறுவனங்கள் மேலும் பெரிதாகி வருகின்றன. டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கவில்லை. மத்திய அரசிற்கு எதிராக பேசுபவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் அதிமுக அரசு ஆதரவளித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. எனவே அதனை ஒத்திவைக்க வேண்டும். சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு பாஜக பின்புலமாக இருக்கலாம். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது.
பெட்ரோல் விலை உயர்வால் வாக்கு வங்கி பாதிக்கப்படும் எனப் பெட்ரோல் பங்குகளில் மோடியின் புகைப்படம் அகற்றப்படுகிறது" என்றார். அவரைத் தொடர்ந்து அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், "திமுக உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கடந்த தேர்தல்களில் முடிவுகளை எழுதிய சம்பவங்கள்