கோயம்புத்தூர்: ஒன்றிய அரசானது ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த இலக்கியவாதி சிற்பி பாலசுப்பிரமணியத்துகு பத்மஸ்ரீ விருது வழங்கவுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிற்பி பாலசுப்பிரமணியம் பேசுகையில், 'தமிழ்நாட்டில் கடைக்கோடி கிராமத்தில் உள்ள என்னைப்போன்ற இலக்கியவாதிகளை ஒன்றிய அரசு தேர்வு செய்து பத்மஸ்ரீ விருது வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.
இது எனது 50 ஆண்டுகால இலக்கியப் பணிக்கு கிடைத்த விருது ஆகும். இதுபோன்ற விருதுகள் இலக்கிய நண்பர்கள், குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது' என்று உவகை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 73ஆவது குடியரசு தினம்: உயர்நீதிமன்றத்தில் கொடியேற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி