கோவை மாவட்டம் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் சொப்பன சுஜா பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் நகைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பின்பு உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சிங்காநல்லூர் காவல்துறையினர், 11 குற்றப்பிரிவு வழக்குகள் சம்பந்தமான 50 சவரன் நகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணியை அவரிடம் அளித்துள்ளனர். ஆனால் 50 விழுக்காடு நகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதுகுறித்து காவல் அலுவலர்கள் விசாரிக்கையில் சரியாக பதில் அளிக்காமல் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவகுமார் சொப்பன சுஜாதாவிடம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உரிய பதில் அளிக்காமல் 50 சவரன் நகையை மோசடி செய்ததை அடுத்து இவரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:
பறிபோன இரு உயிர்கள் - கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடியை வைத்து வழங்கிய மிருகங்கள்