கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் துறையினர் இன்று (நவ. 09) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சோமனூர் அடுத்த கரவளி மாதப்பூர் பகுதியில் ரயில் பாலத்திற்கு கீழ் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரது கையில் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவரது பெயர் முருகன் என்பதும் சிவ பாரத் சேனா என்ற அமைப்பின் கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பதும் தெரியவந்தது. பின்னர் முருகனை கைதுசெய்த காவல் துறையினர் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது!