ETV Bharat / state

சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் - தமிழிசை செளந்தரராஜன் பேட்டி - Tamilisai Soundararajan byte

சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் எனவும், இந்த அடையாளங்களை சிலர் மறைக்க பார்ப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் - தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

author img

By

Published : Oct 6, 2022, 12:53 PM IST

கோயம்புத்தூர் அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கோவை வந்துள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் - தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. இருளில் மூழ்கவில்லை. நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. சிலர் செய்த பிரச்னையால் மின்தடை ஏற்பட்ட நிலையில், மாற்று நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டது. மின் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி.

தனியார்மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடு்த்து விடுவதாக சிலர் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதனால் பொதுமக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பல துணைநிலை மாநிலங்களில் மின்துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும். 24 மணி நேரமும் சிறப்பான செயல்பாடு இருக்கும். இதனால் மின் ஊழியர்கள், அலுவலர்கள் பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு சாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தி, இந்த திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது. மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான் இது.

மின்திருட்டு தடுக்கப்படுவதால் சிலர் இந்த போராட்டங்களை தூண்டி இருக்கலாம். இதனால் மின்துறை ஊழியர்கள், அலுவலர்கள் பணியிலோ அல்லது பதவி உயர்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பான முடிவுகள் முதலமைச்சருடன் பேசித்தான் எடுக்கப்படுகிறது.

கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னதுகூட, பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான். இதை ஊழியர், அலுவலர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். புதுச்சேரி இப்போது நன்றாக இருக்கின்றது. புதுவை மாடல் இனி உயர்ந்த மாடலாக இருக்கப் போகிறது.

மாடல் என்பதை விட புதுவை மாதிரி என்றுதான் சொல்ல வேண்டும். புதுவை மாதிரியாக இருக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. இதை மக்கள் உணர்வார்கள். மின்தடை பிரச்னையால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது உண்மை என்றாலும், உடனடியாக பிரச்னை சரி செய்யப்பட்டது.

எந்த போராட்டத்தாலும் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது எனவும், சுமூக பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தனிபட்ட முறையில் இந்த திட்டம் மக்களுக்கு பலன் தரும் என்று கூறினார். மின்ஊழியர்களின் போராட்டம் திரும்ப வருமா என இனிதான் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து ராஜராஜசோழன் குறித்து திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன இந்து தொடர்பான கருத்துக்கு, நடிகர் கமலஹாசன் ஆதரவு கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “இதற்கு சிரிப்பதா, என்ன செய்வது என தெரியவில்லை என்றார்.

"தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான். இதில் அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாச்சார அடையாளங்களை மறைப்பதை எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கபட்டிருக்கிறது.

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பிக் கொண்டால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். இந்து அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர். அடையாளங்களை மறைக்க முற்பட்டால், அது சரியாக இருக்காது” என கூறினார்.

இதையும் படிங்க: இராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது - நடிகர் கமலஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.