ETV Bharat / state

பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது - பொள்ளாச்சியில் பாலியல் தொல்லை

பொள்ளாச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டப் பெண்ணை பலாத்காரம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்ணைக் கற்பழித்தவர் கைது

author img

By

Published : Dec 29, 2021, 10:40 PM IST

பொள்ளாச்சி: பாலக்காடு ரோடு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 34) திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர்,அப்பகுதியில் பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனநிலை பாதிக்கப்பட்டப் பெண் தனது பெற்றோரிடம் வசித்து வந்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்டப்பெண்ணை உடல்நிலை சரியில்லை என அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும்போது பெண் கர்ப்பமாக உள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் விசாரணையில் பாலசுப்பிரமணியம் மனநிலைப் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கற்பழித்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:2021 RECAP : 2021ஆம் ஆண்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.