ETV Bharat / state

தொடர் கொள்ளை சம்பவம் - பழைய குற்றவாளிகள் இருவர் கைது - கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை

கோயம்புத்தூர்: தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது
கைது
author img

By

Published : Sep 10, 2020, 10:49 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் G.M. மில் பகுதியில் இரவு நேரத்தில் பூட்டி இருந்த ஒரு வீட்டின் கதவினை உடைத்து வீட்டிலிருந்து சுமார் 15 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கவுண்டம்பாளையம், தடாகம் ஆகிய இடங்களிலும் இரவு நேரங்களில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடைபெற்றது.

மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பற்றிய எவ்வித விபரங்கள் அறியாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவுப்படி 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். சிறையில் இருந்து வந்த கைதிகளின் விவரங்களை சேகரித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில், கொலை வழக்குகளில் பழைய குற்றவாளிகளான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ், கரூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தி என்கின்ற நந்தகுமார் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், கோயம்புத்தூர் இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஒரு செயின் பறிப்பு தொடர்பான வழக்கில் மேற்கண்ட இரு குற்றவாளிகளையும் தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடந்த 150 சவரன் வழிபறி கொள்ளையில் தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது.

மேலும் விசாரணைக்கு பிறகு அவர்களிடமிருந்து 42 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.