ETV Bharat / state

சீனியர் கலீமும்... ஜூனியர் சின்னதம்பியும்.. காட்டுக்குள் ஸ்பெஷல் டாஸ்க்..

author img

By

Published : May 2, 2022, 8:10 PM IST

Updated : May 2, 2022, 10:38 PM IST

சின்னத்தம்பி யானை கும்கியாக மாற்றப்பட்ட பின்னர் முதன் முறையாக காட்டு யானையை விரட்ட திண்டுக்கல்லுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது, சின்னத்தம்பிக்கு துணையாக சீனியர் கலீம் யானையையும் உடன் அனுப்பப்பட்டிருக்கிறது.

சீனியர் கலீமும் ஜூனியர் சின்னதம்பியும்
சீனியர் கலீமும் ஜூனியர் சின்னதம்பியும்

கோவையின் கதாநாயகனான சின்னத்தம்பி என்கிற காட்டு யானையை விவசாய நிலத்தை சேதப்படுத்துகிறது என எழுந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனத்துறையினர்.வனத்துறை பிடிக்கும்போது ஏற்பட்ட காயங்களால், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. வனத்துறை ஆரம்பத்தில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என கூறினர் எல்லா யானைகளையும் கும்கியாக மாற்ற முடியாது. மேலும் காட்டில் இருந்து பிடிக்கப்படும் யானைகளுக்கு ஆரம்பத்தில் கும்கிக்கான பயிற்சிகள் கொடுக்கப்படும் பாகனின் சொற்பேச்சு கேட்கக்கூடிய யானைகளே கும்கியாக மாற்றப்படும் அவ்வாறு கேட்காத பட்சத்தில் வளர்ப்பு யானையாக மாற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

கும்கியாக மாற்றும் திட்டம் சின்னதம்பியை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என வனத்துறை தெரிவித்திருந்த போது பயிற்சி கொடுக்க செல்லத்துரை மற்றும் காளியப்பன் என இருவரை சின்னத்தம்பியின் பாகன்களாக நியமித்தது ஆனைமலை வனச்சரகம். டாப்ஸ்லிப் கோழிக்கழுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து கும்கிக்கான பயிற்சிகளை சின்னத்தம்பிக்கு அளித்து வந்தனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது , ஆரம்பத்தில் கும்கிக்கான பயிற்சிகளை சின்னத்தம்பிக்கு கொடுத்தபோது மனிதர்களுடன் பழகிய காரணத்தால் பாகனின் சொற்ப்பேச்சுக்கு கட்டுப்பட்டது மேலும் பாகனின் உத்தரவுகளை அப்படியே பின்பற்றியது. சின்னத்தம்பி உருவத்தில் பெரியதாக இருந்ததால் கும்கிக்கான அத்தனை குணாம்சங்களையும் சின்னத்தம்பி பெற்றிருந்தது. இதையடுத்து கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தனர்” என்றார்.

கரோல் பயிற்சியில் சின்ன தம்பி(கோப்பு படம்)

பெரும்பாலும் ஆண் யானைகளே கும்கியாக மாற்றப்படுகின்றன. யானைகள் இணை சேர்வதற்கான காலம் வரும் போது ஆண் யானைகளுக்கு “மஸ்த்” என்ற அழைக்கப்படும் மதம் பிடித்து விடும் இந்நாட்களில் யானையின் அருகே பாகன் உட்பட எந்த நபரும் செல்லமுடியாது யார் பேச்சையும் கேட்காமல் யானைகள் மிகவும் மிகவும் ஆக்ரோசமாக காணப்படும். இந்நாட்களில் யானைக்கு பயிற்சி கொடுப்பது மிகவும் சிரமம். நல்வாய்ப்பாக சின்னத்தம்பிக்கு ஒரே ஒரு முறை மட்டுமே மஸ்த் பிடித்து அதுவும் உடனே சரியானதால் சரியாக 13 மாதங்களில் கும்கிக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அமைதியான சின்னத்தம்பியை ஆக்ரோசமாக சண்டையிடும் கும்கியாக மாற்றியுள்ளனர் வனத்துறையினர்.

சின்னத்தம்பிக்கு முதல் அசைன்மெண்ட்டாக திண்டுக்கல் மாவட்ட கன்னிவாடிவனசரகத்திற்க்கு உட்பட்ட பன்றிமலை,அழகுமலை,தேனிமலை. கோம்பை, பண்ணைபட்டி ஒரு பட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அட்டகாசம் செய்து வரும் குட்டைகொம்பன் என்ற காட்டுயானை விரட்ட அனுப்பியுள்ளனர்.

திண்டுக்கல்லை அச்சுறுத்தும் குட்டை கொம்பன்

குட்டை கொம்பன் யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதி விவசாய நிலங்கள் சாலைகளில் வலம் வந்து பொதுமக்களை துரத்துவதும் வீடுகளை தாக்குவதும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் தனிமையிலிருந்து தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகே யானை வந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தோனிமலை கீழ்மலை பகுதியான கோம்பை, நாய்ஓடைப் பகுதியிலும் தொடர்ந்து சுற்றிவருகிறது யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கு கும்கி யானையை கொண்டு வரலாம் என வனத்துறையினர் முடிவெடுத்தனர்.

தயார் நிலையில் சின்னத்தம்பி
தயார் நிலையில் சின்னத்தம்பி

எப்போதும் கலீம் என்ற கும்கி யானையையே ஆனைமலை மலைப்பகுதியில் இருந்து காட்டு யானைகளை விரட்ட அனுப்பபடும். கலீம் யானைக்கு 57 வயதாகி விட்டதாலும் இன்னும் 3 வருடத்தில் ஓய்வு பெற செல்ல இருப்பதால் சின்னத்தம்பிக்கு காட்டு யானையை விரட்டும் முதல் டாஸ்க்கினை கொடுத்துள்ளனர் வனத்துறையினர் .சின்னத்தம்பி முதல் முறை காட்டு யானையை விரட்ட செல்வதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என எண்ணிய வனத்துறையினர் சின்னதம்பியின் சீனியரான கலீமையும் கூடவே துணைக்கு அனுப்பியுள்ளது.

சீனியர் கலீமும்... ஜூனியர் சின்னதம்பியும்.. காட்டுக்குள் ஸ்பெஷல் டாஸ்க்..

தற்போது ஒற்றை யானை எங்கு உள்ளது என்பது குறித்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். யானை பகல் நேரத்தில் உறங்கும் பழக்கமுடையது அதற்காக ஒரு சில இடத்தை தேர்வு செய்யும் அந்த இடத்தை கண்டறிந்தவுடன் உடனடியாக கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்படும்.சின்னத்தம்பியின் முதல் டாஸ்க்கினை சிறப்பாக செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்!

இதையும் படிங்க: செல்லப்பிள்ளை To முரட்டு கும்கி சின்னத்தம்பி

Last Updated : May 2, 2022, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.