நஞ்சப்பா சாலை பார்க் வீதியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கறிவேப்பிலை, வெங்காயத்தை மாலையாக அணிவித்து அதன் விலையுயர்வைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் கறிவேப்பிலை கடைகளில் மலிவாக கிடைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது அதிசயமான பொருளாக பார்க்கப்படுகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். மேலும் கறிவேப்பிலை, வெங்காயத்துடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் செய்ய போவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விதை வெங்காயம் விலை உயர்வு