ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு - பணியாளர் இல்லாமல் செயல்படும் பேக்கரி!

கோவை: ஊரடங்கு உத்தரவு காரணமாக பணியாளர் இல்லாமல், ரொட்டிக் கடை செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணியாளர் இல்லாமல் செயல்படும் பேக்கரி
பணியாளர் இல்லாமல் செயல்படும் பேக்கரி
author img

By

Published : Apr 4, 2020, 1:21 PM IST

கோவை ரத்தினபுரி பகுதியில் நெல்லை முத்து விலாஸ் & பேக்ஸ் கடையை விக்னேஷ் நடத்திவருகிறார். இவரது கடையில் ரொட்டி ஃபேமஸ் என்பதால் மக்கள் அனைவரும் அதை விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

இதற்கிடையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் பசியாற ரொட்டி தடையின்றி கிடைக்கும் வகையில் விக்னேஷ், செல்ப் சர்வீஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி அக்கடை முன்பு ரொட்டி பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் கடை பணியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

பணியாளர் இல்லாமல் செயல்படும் பேக்கரி

ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை 30 ரூபாய் எனவும், ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை, அருகிலுள்ள ஒரு பெட்டியில் வைத்து செல்லவும் என்று எழுதி ஒட்டப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பாக்கெட் ரொட்டி விற்பனையாவதாகவும், எந்நேரத்திலும் மக்களுக்கு ரொட்டி கிடைக்க செய்ய வேண்டுமென்ற நோக்கில், இதனை செய்துள்ளதாகவும் உரிமையாளர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். பணியாளர் இல்லாத கடையும், பணத்தை முறையாக வைத்துச் செல்லும் மக்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட பார்: சீல் வைத்த கலால் துறையினர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.