சென்னை: செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டத்தில், நகராட்சிமன்ற தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அவரை நோக்கி டம்ளரை எறிய முயன்றதாகவும் எதிர்கட்சியினருக்கு எதிராக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர்.26) நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். தமிழ்செல்வன், விதிகளை பின்பற்றாமல் தீர்மானம் நிறைவேற்ற முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களுக்கு எதிராக காவல்நிலையத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதையும் படிங்க: கிணற்றில் தவறிய ஒருவர்; அதை பார்க்கச் சென்ற பெண்ணும் தவறிய சோகம்!
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 8 அதிமுக கவுன்சிலர்களுக்கும் முன்ஜாமீன் வழங்கிய நிலையில் ஒரு வாரத்திற்கு அவர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்