ETV Bharat / state

நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? - சீமான் கேள்வி

Veeralakshmi Boxing Challenge: புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? நான் புலி என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார்.

Veeralakshmi Boxing Challenge
நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 2:59 PM IST

சீமான் செய்தியாளர் சந்திப்பு

கோவை: சிட்ரா பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு 65அடி உயர தீரன்சின்னமலை நினைவு கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சீமான், "என்னுடைய கனவு, இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது கிடையாது. என்னுடைய தம்பி தங்கைகளை அனுப்புவேன். தமிழ் தேசியத்தில் உரிமை என்ற கனவு தான் என்னுடைய கனவு" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி விவகாரம் குறித்த கேள்விக்கு, "புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? நான் புலி. என்னை எதிர்த்து பேசுவது அவர்களுக்கு ஒரு அடையாளம். என்னை எதிர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களை எதிர்க்க, விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் என் எதிரிகள் கிடையாது. நான் யாரை எதிர்க்ககின்றேனோ அவர்கள் தான் என் எதிரிகள். என் எதிரி யார்? என் இலக்கு, என் பயணம், எவ்வளவு தூரம் என்பது எனக்குத் தெரியும். என்னோடு ஒப்பிட்டுப் பேசுவது எனக்கும் சிறுமை, உங்களுக்கும் சிறுமை, நான் செய்யும் வேலைக்கும் சிறுமை. இதை விட்டு விடுங்கள்

இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என வரும் பொழுது சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் மம்தாவை எதிர்பார்ப்பார்கள். கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் மாறி மாறி வாக்கு செலுத்துவார்களா? மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவு எடுப்பது எப்படி சரியாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அண்ணா துவங்கிய கட்சி எதிர்வினையாற்ற வில்லை. அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும் அதிமுக, அது குறித்து எதிர்விணையாற்றி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என குரல் கொடுத்து இருக்கின்றது. இதில் அதிமுகவின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி எதிர்வினையாற்றி இருக்கிறார். இதில் முதல்வரின் கருத்து என்ன? உதயநிதி, கருணாநிதி ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அண்ணா என்பதால் கண்டு கொல்லவில்லை.

இதையும் படிங்க: சீமானை சண்டைக்கு கூப்பிடும் வீரலட்சுமி..! தயார் நிலையில் மைதானம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.