ETV Bharat / state

கோவை வரும் ஜனாதிபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

author img

By

Published : Feb 10, 2023, 10:59 PM IST

கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளதை அடுத்து இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர் பூண்டி அருகேவுள்ள ஈஷா யோகா மையத்தில், வருடந்தோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 18ஆம் தேதி நடக்கும் சிவராத்திரி விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வருகிற 18ஆம் தேதி காலை டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம், மதுரை விமான நிலையத்துக்குச் செல்லும் ஜனாதிபதி அங்கிருந்து கார் மூலமாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு மீனாட்சியம்மனை தரிசித்து விட்டு கோவிலைச் சுற்றி பார்க்கிறார். தொடர்ந்து கார் மூலமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்.

அங்கிருந்து விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஈஷா யோகா மையத்திற்கு மாலை 6 மணிக்குச் செல்கிறார். ஈஷா யோகா மையத்திற்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்முவை, ஈஷா மைய நிறுவனர் சத்குரு மற்றும் நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி, தியானலிங்கம், 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றையும் பார்வையிடுகிறார்.

பின்னர் ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிலும் பங்கேற்கிறார். மேலும் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் இருந்த படியே ஆதியோகி சிலையை பார்வையிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளையும் ஈஷா மைய நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, மேற்கு மண்டல் ஐஜி சுதாகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதில் மாநகராட்சி ஆணையர், காவல் துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஜனாதிபதியின் வருகை,புறப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவைக்கு ஜனாதிபதி வருகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிவதற்காக, ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர் விரைவில் கோவை வருகை தர உள்ளனர்.

அவர்கள் கோயம்புத்தூர் வந்து, உயர் காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிகின்றனர். இதற்கிடையே ஜனாதிபதி திரௌபதி முர்மு குன்னூர் வெலிங்டனில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: டேபிள் போச்சே... கோபத்தில் கண்ணாடி மேசையை உடைத்த சார் ஆட்சியர்... நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.