ETV Bharat / state

மக்கள் சபை நிகழ்ச்சி: மனுக்களை பெற்ற செந்தில் பாலாஜி - people assembly meeting

கோயம்புத்தூரில் மக்கள் சபை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட செந்தில் பாலாஜி, மக்களிடம் கோரிக்கை மனுகளை பெற்றுக் கொண்டார்.

செந்தில் பாலாஜி  மக்கள் சபை நிகழ்ச்சி  கோரிக்கை மனு  கோயம்புத்தூர் செய்திகள்  மனுக்களை பெற்றார் செந்தில் பாலாஜி  coimbatore news  coimbatore latest news  second day of people assembly meeting  people assembly meeting  senthil balaji
செந்தில் பாலாஜி
author img

By

Published : Nov 1, 2021, 10:06 AM IST

கோயம்புத்தூர்: பொண்ணையராஜபுரம் மாரண்ண கவுண்டர் ஆரம்பப் பள்ளியில், இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயம்புத்தூரில் சுமார் 150 இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மக்கள் சபைக் கூட்டங்களில் துறை சார்ந்த அலுவலர்களும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவார்கள்.

மனுக்களைப் பெற்ற செந்தில் பாலாஜி

முதல் நாளாக அக்டோபர் 30ஆம் தேதி அன்று நடந்த மக்கள் சபைக் கூட்டத்திலே, வெறும் ஆறு வார்டுகளில் மட்டும் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டங்களில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலான மனுக்களில் முதியோர் உதவித்தொகை பெற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுக்கள்

இந்த மனுக்கள் மீது முன்னுரிமை அளிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்புத்தூரில் பொதுமக்கள், வணிகர் சங்கங்கள் அடிப்படை கட்டமைப்பு ஆகியவை குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள ஐந்து மாதங்களில் வழங்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டுத் திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

முதலமைச்சர் ஸ்டாலின் 234 தொகுதிகளையும் தனது தொகுதிகளாக எண்ணி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மின்சாரத் துறையில் உள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: பெண் நிர்வாகியை சந்தித்த விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.