தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
கரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி
அதன்படி, கோயம்புத்தூர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி, தான் சேமித்து வைத்திருந்த சுமார் 14 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை கரோனா நிவாரணத்திற்காக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று (மே.30) கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், அந்த சேமிப்பு பணத்தை நேரில் வழங்கி மாணவி வாழ்த்து பெற்றார்.
கோயம்புத்தூரில் நேற்று (மே.30) ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சரிடம், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மனு, அன்பளிப்புகள் வழங்கினர். அதனை மறுக்காமல் அவர் பெற்று கொண்டது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க:தந்தை நினைவாக ஆதரவற்றோருக்கு உணவளிக்க சேர்த்த தொகை: கரோனா நிவாரண நிதியாக வழங்கிய மாணவி