கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் ஏ.நாகூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் பேச்சிமுத்து (13). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் சுப்பிரமணியம் குடும்பத்தினர் பழனி கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் சுப்பிரமணியம் தனது மகன் பேச்சிமுத்துவை "பள்ளிக்குச் சென்று வா!" என்று சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பினார். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த பேச்சிமுத்துவிடம் சுப்பிரமணியம் கையில் பத்து ரூபாய் கொடுத்து பள்ளிக்குப் போ என்று சொல்லி விட்டு வேலைக்குச் சென்று விட்டார்.
இதனையடுத்து பேச்சிமுத்து வீட்டிற்குள் சென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இவருடைய அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த பேச்சிமுத்துவின் தாயார் கத்தி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
பின்னர் பேச்சிமுத்துவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பேச்சிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
ஆழ்துளைக் கிணறு விவகாரம் - அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு