ETV Bharat / state

சுரபி குழும நிறுவனங்கள் மீது மோசடி வழக்கு - Surabi Group companies

கோவை : சுரபி குழும நிறுவனங்கள் மீது மோசடி, கூட்டு சதி, பொய்யான ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCAM
SCAM
author img

By

Published : Oct 9, 2020, 8:49 PM IST

கேரள மாநிலம், பாலக்காட்டை தலைமையிடமாகக் கொண்டு சுரபி குழுமம் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் இந்தக் குழுமம், சுரபி ஸ்டீல்ஸ், சுரபி அயன் அண்ட் ஸ்டீல், சுரபி ரோலிங் மில் என பல்வேறு பெயர்களில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக காதர் பிள்ளை, அனுஜ் காதர், சனூஜ் காதர், ரூக்கியா காதர் ஆகியோர் உள்ளனர்.

2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், இவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய ஒப்பணக்கார வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றுள்ளனர். அக்கடனை சுரபி குழுமம் திருப்பி செலுத்தாமல் இருந்து வந்த நிலையில், போலியான ஆவணங்களைக் கொடுத்து அவர்கள் கடன் பெற்றது கடந்த 2019ஆம் ஆண்டு வங்கி நிர்வாகம் மேற்கொண்ட தணிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேலும், சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனையின் ஈடுபட்டிருப்பது, மூன்று நிறுவனங்களின் பெயரில் பெற்ற கடனுக்கு வட்டி, அசல் செலுத்தாமல் இருந்ததால் 37.74 கோடி ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இரண்டு கணக்குப் புத்தகங்களை வைத்துக்கொண்டு உண்மையான கணக்குகளை அவர்களிடமும் போலியான கணக்குகளை வங்கிக்கும், பதிவாளர் அலுவலகத்திற்கும் கொடுத்திருப்பது ஆகியவையும் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் சரஸ்வதி, சிபிஐயில் இது குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் சிபிஐ அலுவலர்கள் சுரபி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர் மீது மோசடி, கூட்டு சதி, பொய்யான ஆவணங்களை உருவாக்குதல், போலியான ஆவணங்களை தாக்கல் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் திருட்டு: வீட்டில் வெள்ளையடித்த 2 பேரிடம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.